Categories
லைப் ஸ்டைல்

பணத்தை சேமிக்க…. எளிய டிப்ஸ் இதோ…!!

பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் இந்த எளிய டிப்ஸ் மூலம் கற்றுக்கொள்ளுங்கள்.

இன்றைய காலகட்டத்தில் பணம் இருந்தால் தான் மதிப்பு. நம்முடைய குழந்தைகளை படிக்க வைப்பதற்கும், அன்றாட செலவுகளுக்குமே பணம் அதிகமாக தேவைப்படுகிறது. இது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். ஆனால் அவசியமற்ற தேவைகளுக்கு பணத்தை வீணாக செலவு செய்யக்கூடாது. பணத்தின் மதிப்பு எப்போதுமே குறையாது. கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் சரி, எளிதாக பணத்தை சம்பாதித்தாலும் சரி பணம் எப்போதுமே பணம் தான்.

இப்படிப்பட்ட பணத்தை எப்படி பாதுகாப்பாக சேர்க்க வேண்டும் என்[என்பதை சில எளிய டிப்ஸ் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவர் தன்னுடைய சம்பளத்திலோ, தொழில் லாபத்திலோ செய்யக்கூடிய செலவுகளை தேவைக்கான செலவு, ஆசைக்கான செலவு, எதிர்பாராத செலவுகள் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இதில் தேவைக்கான செலவும், எதிர்பாராத செலவும் கட்டாயமாக செய்ய வேண்டியவை. ஆனால் ஆசைக்கான சலவை செய்யும் முன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செய்தாலோ அல்லது அந்த செலவை தவிர்த்து சுலபமாக பணத்தை சேமிக்க முடியும்.

Categories

Tech |