மீனம் ராசி நேயர்களே…!! இன்று குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். நல்ல ஆடைகள் , நண்பர்களின் அருகாமை , நல்ல அதிர்ஷ்டம் என எல்லாவற்றையும் இன்று நீங்கள் அனுபவிப்பீர்கள். எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மையும் கிடைக்கும். இன்று பொருள் வரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாகவே நடந்து முடியும். நன்மைகள் அதிக அளவில் நடக்கும்.
இன்று உடனிருப்பவர்கள் ஆதரவு கொடுப்பார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். இன்று கூடுமானவரை நீங்கள் வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். அதே போல நீங்கள் வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு சென்றால் அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் சென்றால் வெற்றி வாய்ப்புகளை பெற முடியும். மேலும் நீங்கள் வெற்றி வாய்ப்புகளை குவிப்பதற்கு காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரத்தை மேற்கொண்டு இந்த நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்