புவி வெப்பமயமாதலை தடுக்கக்கோரி பொதுமக்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார் அதில், புவி வெப்பமயமாதலால் தான் தண்ணீர் தட்டுப்பாடு தற்பொழுது ஏற்பட்டு உள்ளது ஆகையால் புவி வெப்பமயமாதலை தவிர்க்க மக்கள் அனைவரும் ஒன்றுகூடி செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் புவி வெப்பமயமாதலை தடுக்க மரம் நட வேண்டும் என்றும் தண்ணீரை வீணாக்க கூடாது என்றும் மழைநீரை சேகரிப்பதற்கான நடைமுறைகளை கையாளுமாறு அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் மேலும் தனிமனிதனால் புவி வெப்பமயமாதலை தடுக்க முடியாது ஆகையால் பொதுமக்களின் அனைத்து பொதுமக்களின் ஒத்துழைப்பும் நமக்கு தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்