Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

48 மணி நேரம் …. மீண்டு வா சுர்ஜித்! – இதுவரை நடந்தது என்ன ? முழு அப்டேட் …!!

திருச்சி நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய சிறுவன் சுஜித்தை மீட்கும் பனி 48 மணி நேரமாக நடைபெற்று வருகின்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (25-10-19) மாலை 5:40 மணி அளவில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது சுமார் 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. தவறி விழுந்த குழந்தை 30 அடி ஆழத்தில் இருக்கும் போதே மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் தான் வடிவமைத்த பிரத்தியேக கருவியின் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடன் கோவை, நாமக்கல் குழுவினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால், ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரத்தை வைத்து தோண்டும் பணி தீவிரமானது.

இதற்கிடையில், “அம்மா இருக்கேன் சாமி. பயப்படாத. உன்ன எப்படியாவது மீட்டுருவேன்” என்று குழந்தையின் தாயார் பேசிய போது, அவனிடமிருந்து “ம்.. ம்.. ” என்ற பதில் மட்டும் வந்தது. பின்னர் சமூக வலைதளங்களில் சுஜித் மீண்டு வருவான் என்ற நம்பிக்கையும் அவனை மீட்க முற்படும் பிரார்த்தனைகளும் அதிகமாயின.

மணிகண்டனின் முயற்சி தோல்வியை தழுவிய நிலையில், ஐஐடி குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தாங்கள் வடிவமைத்த நவீன கருவியின் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஜேசிபி இயந்திரத்தை வைத்து தோண்டுவதால் ஏற்படும் அதிர்வுகளால் குழந்தை சுஜித், 68 அடிக்கும் கீழே சென்றான்.

ஐஐடி குழுவினரின் முயற்சியும் தோல்வியை தழுவிய நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தை அடையும் முன் குழந்தை சுஜித் 100 அடிக்கும் கீழே சென்றான். அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவிய நிலையில் இறுதியாக போர்வெல் குழி அருகே ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

இது போன்ற சம்பவங்கள் நமக்கு புதிதானது அல்ல. இதற்கு முன் ஆழ்துளை கிணறுகளில் விழுந்த எத்தனையோ குழந்தைகள் உயிரோடோ அல்லது இறந்தநிலையிலோ மீட்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நம்முடைய வேதனையும் பிரார்த்தனையும் தற்காலிகமாகவே இருக்கிறதே தவிர, நிரந்தர தீர்வுகளை காண முன்வருவதில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முன்வருமா என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 33 மணி நேரத்துக்கும் மேலான நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ரிக்  இயந்திரத்தை சம்பவ இடத்தில் நிலை நிறுத்துவதற்கான பணி  விரைவாக நடைபெற்று வருகிறது.தற்காலிகமாக  ஆழ்துளைக் கிணற்றின் அருகே மேடு அமைக்கப்பட்டு, ரிக் இயந்திரத்தின் பணி தொடங்கியது. இன்னும் சில மணி நேரத்தில் சுஜித் மீட்கப்படுவான் என்ற தன்னம்பிக்கை எழுந்துள்ளது.

ரிக் இயந்திரத்தின் உபரி பாகமான ட்ரில்லரை இயந்திரத்துடன் இணைக்கும் பணி தொடங்கியுள்ள நிலையில், நடுகாட்டுப்பட்டியில் இந்த நேரத்திலும்  பரபரப்பான சுழலே நிலவி வருகிறது.

ஆழ்துளைக் கிணற்றின் அருகே மூன்று  மீட்டர் தூரத்தில் ஒரு மீட்டர் அகலத்தில் புதிதாக பைல் பவுண்டேஷன் என்ற முறை மூலம் மற்றொரு ஆழ்துளைக் கிணறு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.அங்கிருந்து குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக் கிணறுக்கு இணைப்பு ஏற்படுத்தி தீயணைப்பு வீரர் ஒருவர் பாதுகாப்பு கவசங்களுடன் உள்ளே சென்று குழந்தை  மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய முறையின் மூலம் மீட்பு பணி முடிய 3 முதல் 4 மணி நேரம் ஆகும்.

#SaveSujith

குழந்தையை மீட்கும் இடத்தில் கட்டுவிரியன் பாம்பு  வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கூட்டத்தில் பொதுமக்கள் யாரையும் அந்த பாம்பு தீண்டாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பாம்பை அடித்துக் கொன்றனர்.

குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கு மாற்று ஆழ்குழாய் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது குறித்து மீட்புக்குழுவினரிடம்  அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் சிவராஜ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ரிக்  இயந்திரத்துடன் டிரில்லரை பொருத்தும் பணியில் எல்&டி பணியாளர்களும், என்.எல்.சி பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ரிக் இயந்திரமானது ஜெர்மனியைச் சேர்ந்த maid நிறுவனத்தின் கண்டுப்பிடிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக ரிக் இயந்திரம் பொருத்தப்பட்டு, குழி தோண்டும் பணி தொடங்கியது. மூன்று மீட்டருக்கு பதில் இரண்டு மீட்டர் தொலைவில் குழி தோண்டப்படவுள்ளது.

ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் தோண்டும்  பள்ளத்தில்  தீயணைப்பு வீரர்கள் மூவர் இறங்கவுள்ளனர். அவர்கள், யாரென்று பள்ளம் தோண்டிய பிறகே முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் சுர்ஜித் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கை தற்போது துளிர்த்துள்ளது.

குழிக்குள் இறங்க தயாராகுழிக்குள் இறங்க தயார் நிலையில் உள்ள நகைமுகன்க உள்ள நகைமுகன்

சுர்ஜித்தை மீட்பதற்காக மீட்புக் குழுவினர் நான்கு பேரை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் பள்ளத்தில் இறங்கலாம் என்றும் அதைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை அவர்களிடத்திலே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மணிகண்டன் என்பவர் பள்ளத்தில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்பதற்கு தமிழ்நாடு தீயணைப்புத் துறையைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளது. இதில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பகுதியைச் சேர்ந்த நகைமுகன் உள்ளே இறங்கப்போவதாகவும் அவருடன் மீதமுள்ள ஆறு பேரில் யாரேனும் ஒருவர் உதவிக்கு செல்ல இருப்பதாகவும் தீயணைப்புத் துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

27 அடி ஆழத்தை எட்டிய புதிய ஆழ்துளை கிணறு

ஆழ்துளை கிணற்றிற்கு அருகே குழி தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், சுர்ஜித்தை மீட்பதற்காக ஏழு பேர் கொண்ட தீயணைப்புத் துறை குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், இந்தப் பணி முடிவடைய இன்னும் 5 மணிநேரம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குழி தோண்டும் அதிர்வால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணியை மெதுவாக நடத்திவருவதாகத் தெரிவித்த அவர், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழுவினர் கொண்டு வந்த தெர்மல் கேமராவில் நேற்று 4 மணியளவில் சுஜித் மயக்கநிலையில் இருப்பது தெரியவந்ததாகவும், உயிருக்கு பாதிப்பு இல்லையென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சுஜித்தின் மீட்புப் பணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு, தற்போது 25 அடி குழி தோண்டியுள்ள நிலையில் பாறைகள் தென்படுவதால் குழி தோண்டும் பணி தாமதமாகிறது. மேலும் இந்த பாறை 40 அடிவரை உள்ளதால் குழி தோண்டும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.

சுர்ஜித்தின் மீட்புப் பணி குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர்

புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி 27 அடி ஆழத்தை எட்டியுள்ளது. தற்போது ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரிக் எந்திரம் மணிக்கு 2 முதல் 3 மீட்டர் ஆழம் வரை மட்டுமே துளைக்கக் கூடியதாகும். இதை விட மூன்று மடங்கு திறன் கொண்ட ரிக் எந்திரம் சிவகங்கையில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த எந்திரம் வந்தவுடன் துளை போடும் பணி மேலும் வேகமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை சிக்கியிருக்கும் குழியில் 40 அடிவரை பாறைகள் இருப்பதாலும் மண் சரிவு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் குழி தோண்டும் பணி மெதுவாக நடைபெற்று வருகிறது.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடே தீபாவளியைக்கொண்டாடிவரும் நிலையில், தமிழ்நாட்டில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சுர்ஜித் என்ற குழந்தையை மீட்க காலத்திற்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. குழந்தையைக் கூடிய விரைவில் மீட்டு அவர்களின் பெற்றோர்களுடன் சேர்க்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சிறுவன் சுர்ஜித்தை மீட்க ராமநாதபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய ரிக் இயந்திரம் நடுக்காட்டுப்பட்டியை வந்தடைந்துள்ளது. இந்த புதிய ரிக் இயந்திரம் தற்போதுள்ள இயந்திரத்தைவிட மூன்று மடங்கு வேகத்தில் பாறையைத் துளைக்கும் தன்மையுடையதாகும்

சிறுவன் சுர்ஜித்தின் மீட்புப் பணிகளைப் பார்வையிட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ளார். அவர் மீட்புப் பணிகள் குறித்து அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்த பின் சுர்ஜித்தின் பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பெற்றோர்களுக்கு திருமாவளவன் ஆறுதல்

நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த  எம்.பி. திருமாளவளவன், “ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவங்களில் இதுவே கடைசியாக இருக்கட்டும். இதுபோன்ற சம்பவம் இனி இந்தியாவில் எந்த இடத்திலும் நடக்கக் கூடாது.

செவ்வாய்க் கிரகத்துக்கு செயற்கோளை அனுப்பும் நம்மிடம், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தையைக் காப்பாற்ற என்ன கருவிகள் உள்ளது” எனக் கேள்வியெழுப்பினார். மேலும் ஆழ்துளைக் கிணறுகள் பிரச்சனைகள் குறித்து கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்றார்.

நடுக்காட்டுப்பட்டியில் நடைபெற்றுவரும் குழந்தையின் மீட்புப் பணிகள் குறித்துப் பார்வையிடச் சம்ப இடத்துக்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உயதகுமார் வருகை தந்துள்ளார்.

Categories

Tech |