Categories
உலக செய்திகள்

“சவுதி இளவரசருக்கு” எதிராக… கிரிமினல் வழக்குப் பதிவு செய்த பிரபல நாடு… காரணம் என்ன தெரியுமா…?

சவுதி இளவரசருக்கு எதிராக ஜெர்மனியில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக இருப்பவர் முகமது பின் சல்மான். தற்போது இவர் மீதும் சவுதி  அரேபியாவின் உயர் அதிகாரிகள் மீதும் ஜெர்மனியில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு ஆவணத்தில், சவுதி அரேபியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 34 பத்திரிக்கையாளர்களை சித்தரவதை செய்வது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆவணத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் ஜெர்மனியில் மட்டும்தான் வெளிநாடுகளில் நடக்கும் குற்றங்களுக்கு நீதி வழங்க சட்டத்தில் அனுமதி உண்டு. பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்ட விவகாரத்தில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் வழங்கிய பிறகே அந்த சம்பவம் நடைபெற்றது என்று அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் காதலி Hatice Cengiz கூறியதாவது, ” கொலை வழக்கில் உண்மை வெளிவந்துவிட்டது. ஆனால் இந்த கொலையை செய்த கொலைகாரன் தப்பித்து விடக்கூடாது. ஒருவேளை இந்த வழக்கிலிருந்து கொலைகாரன் தப்பித்து விட்டால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |