சவுதிஅரேபியாவில் திருமணம் தொடர்பாக ஒரு சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
சவுதி அரேபியாவில் திடீரென்று திருமணம் தொடர்பாக ஒரு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் கீழ்க்கண்ட நாடுகளை சேர்ந்த பெண்களை சவுதி நாட்டு ஆண்கள் திருமணம் செய்யவே கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான்
- வங்கதேசம்
- மியான்மர்
- சாட்
ஒருவேளை கட்டுப்பாட்டை மீறி திருமணம் செய்து கொள்ளும் நிலை வந்தால் அரசுக்கு முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு அரசு அனுமதி அளித்தால் மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுடன் தான் திருமணம் நடைபெறும் என்று ஒரு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. திடீரென்று அமலுக்கு வந்த இந்த சட்டத்தினால் அந்நாட்டு ஆண்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த சட்டத்தை எதிர்க்கும் வகையில் பாகிஸ்தானியரும், வங்க தேசத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.