Categories
உலக செய்திகள்

சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம்… பயங்கர தாக்குதல்… பரபரப்பு…!!!

 சவுதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

சவுதி அரேபியாவில் ஜெட்டாவில் உள்ள அரம்கோ என்ற மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது ஏமனிலன்  ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். மேலும் இந்த ஏவுகணை தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை தாக்குதலால் அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜெட்டா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அனைத்தும் நாட்டிலுள்ள மற்ற விமான நிலையங்களுக்கு திசைமாற்றி அனுப்பபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனிடையில் சவுதி எண்ணை நிறுவனத்திலிருந்து எந்தவித தாக்குதலும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் அமெரிக்கா சவுதி மீது வைக்கப்பட்டிருந்த தடைகளை சில வாரங்களுக்கு முன்பு தடை செய்தது. அதன்பிறகு ஹவுத்தி மக்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் நினைவுறுத்தியது.

Categories

Tech |