சிவப்பு நிற பட்டியலிலுள்ள நாடுகளுக்கு சென்று வந்தால் 3 ஆண்டுகள் பயணத் தடை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சவூதி அரேபியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக சில பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. அதில் சவூதி அரேபியாவில் உள்ள மக்கள் அவர்களின் சிவப்பு நிற பட்டியலிலுள்ள நாடுகளுக்கு சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறியவர்களுக்கு 3 வருடங்கள் பயணம் மேற்கொள்ள தடை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சவூதி அரேபியா மக்கள் சிவப்பு நிற பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சென்று திரும்பி வந்ததது தெரிய வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அதிலும் சிவப்பு நிற பட்டியலில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பிரேசில், அமீரகம், எகிப்து போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.