Categories
உலக செய்திகள்

குவிந்து கிடந்த எலும்புக்கூடுகள்…. பரிசோதனை செய்த ஆராய்ச்சியாளர்கள்…. வெளியான அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்….!!

குகை ஒன்றிலிருந்து சுமார் 1917 க்கும் அதிகமாக பண்டைய காலத்து எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் உம்மு ஜிர்சான் என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள குகை ஓன்று உள்ளது. அந்த குகை முழுவதும் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த குகையானது பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக வெளியேறிய லாவா குழம்பாலானது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த குகையில் சுமார் 1917 க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் குவிந்துள்ளது. இந்த எலும்புக்கூடுகளை பரிசோதனை செய்த ஆராய்ச்சியாளர்கள் கழுதை, புலி, ஒட்டகங்கள் போன்ற விலங்குகளின் எலும்புக்கூடு மட்டுமில்லாமல் ஒரு சில மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓட்டின் எச்சங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இந்த எலும்புக்கூடுகள் எல்லாம் சுமார் 439 முதல் 6839 வருடங்கள் பழமையானது என்று கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புக் குவியல்கள் பண்டைய அரேபியாவின் காலத்திற்கு சொந்தமானது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்ற சம்பவம் கடந்த 1942 ஆம் ஆண்டு செக் குடியரசில் சர்ப்ஸ்கோ என்னும் பகுதியில் நடந்துள்ளது. மேலும் இந்த எலும்புக்கூடுகள் எல்லாம் எப்படி இங்கே வந்தது என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |