செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பராமரிப்பது மாநில அரசு. போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசாங்கத்தினுடைய கடமை. திராவிட முன்னேற்றக் கழக அரசின் பணியும் கூட. தமிழகத்தில் இன்றைக்கு போதை பொருள் தலை விரித்தாடி கொண்டிருக்கிறது. கஞ்சாவை பயன்படுத்தாதீர்கள் என்று விழிப்புணர்வு நடத்த வேண்டிய அளவுக்கு தமிழகத்தின் நிலைமை இன்று சீர்குலைந்து இருக்கிறது. அதிலிருந்து நாம் முதலில் வெளிவர வேண்டும்.
நீங்க குஜராத்னு சொல்றீங்க. குஜராத் எங்கிருந்து வருது, பாகிஸ்தானில் இருந்து வருகிறது. அதை நாம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வெளி உலகத்திற்கு காட்டிக்கொண்டு இருக்கின்றேன். தமிழ்நாடு மாறி நாங்க வந்து மூடி மறைக்கவில்லை. என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ, அது வெளி உலகத்திற்கு காட்டப்படுகிறது. அதனால இந்த வீணான ஒரு அரசியலை விட்டுவிட்டு, ஒரு ஆக்கபூர்வமாக கஞ்சாவை தமிழகத்தில் கட்டுப்படுத்துவதற்கு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இளைஞர்கள் அந்த தவறான பாதைக்கு செல்லாமல் இருக்க தமிழக அரசாங்கம் ஒரு சிறப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, தமிழகத்தின் உடைய சட்ட ஒழுங்கு இன்றைக்கு சீர் கட்டு இருக்கிறது. காவலர்களுக்கு பாதுகாப்பில்லை. ஜெயிலர்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஜெயிலர் மீது வெடிகுண்டு வீசப்படுகிறது. அவர்கள் எல்லாம் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். அரசாங்கம் நம்முடைய சட்ட ஒழுங்கை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.