செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், மத்திய அரசு, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றமோ சொல்கிறது தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடிகள் பட்டியல் வகுப்பிற்கு தான் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க முடியும் என்று… மற்றவர்களுக்கு எடுக்க முடியாது என்று… அது ஏன் எடுக்க முடியாது? எதற்காக எடுக்கக் கூடாது? இது என்ன ஜனநாயகம் ?
நான் எவ்வளவு இருக்கின்றேன் என்று எண்ணி சொல்வதற்கு, உனக்கு என்ன இடையூறு ? மத்திய அரசு நினைத்தால் புள்ளி விவரத்தை சொல்ல முடியும் என்றால், ஒரு தடவை நினையுங்கள். ஏனென்றால் நீங்கள் நினைத்து இருந்தீர்கள் என்றால், இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று சொன்னால், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு, ஒரே மதம், ஒரே தேர்தல் ஆகியவற்றை நிறைவேற்ற முடியாது. இதெல்லாம் மக்கள் எதிர்பார்கள்.
அவர்களுடைய வலிமை என்று தெரியவில்லை, யானையின் வலிமை என்னவென்று யானைக்கு தெரியாததனால் தான், சிங்கம் தலைவராக இருக்கிறது. காட்டிற்கு ராஜாவாக இருக்கிறது. அதனால் நாங்கள் யானையா அல்லது பூனையா ,புலியா ? எலியா ? என்பதை எண்ணி சொல்லுங்கள். அப்போது தானே எங்களுக்கு தெரியும். அதனால் நீங்கள் ஜாதி வாரி, குடிவாரி, மொழிவாரி கணக்கெடுப்பு எடுங்கள் என தெரிவித்தார்.