Categories
அரசியல்

இப்படி சொல்லுறாங்க சார்…! ”எங்க மனசுக்கு கஷ்டமா இருக்கு” விஜயபாஸ்கர் வேதனை …!!

கொரோனா குறித்த விவரங்களை தமிழக அரசு மறைக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மாண்புமிகு அம்மாவின் அரசு ஆரம்ப நிலையில் இருந்து, தொடர்ந்து கொரோனா குறித்த தகவல்களை வெளிப்படைத் தன்மையோடு வெளியிடுகின்றது. இந்தியளவில் தமிழகம் வெளியிடும் கொரோனா குறித்த செய்திக்குறிப்பில் அதிகமான தகவல்கள் இருக்கின்றது. எல்லாவிதமான புள்ளிவிவரங்களையும் பொதுவெளியில் வெளியிடுகிறார்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பாராட்டுறாங்க.

எதையும் மறைக்கல:

ஒரு சில நேரங்களில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கட்டும், அரசியல் தலைவர்களாக இருக்கட்டும், விவாத மேடையில் சிலர் பேசுகின்றபோது அரசு இறப்பு, கொரோனா பரிசோதனையை மறைந்தது சொல்கிறது என்று சொல்கிறார்கள். மறைக்கும் விதமாக எதுவும் கிடையாது. நமக்கு மாநிலம் அளவில் யூனிட் ஐடி நம்பர் இருக்கு, மத்திய அரசின் ICMRரின் இணையம் (portal) என அனைத்திலும் நாம் பதிவேற்றம் செய்கின்றோம். ஒவ்வொரு டெஸ்ட்டையும் நாம் பதிவேற்றம் செய்யும் போது  பாசிட்டிவ், நெகட்டிவ் என வெளிப்படையாக வெளியிடுகின்றோம்.

வெளிப்படை தன்மை:

அதிகமான டெஸ்டிங் லேப் இருப்பதால் அதிகமான சோதனை தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையிலும் செய்கின்றோம். தனியார் மருத்துவமனையில் கட்டணத்தை குறைத்துள்ளோம், எல்லாரும் அதிகமாக டெஸ்ட் எடுக்குறாங்க எண்ணிக்கை கூடுது. எண்ணிக்கை கூடுவதால் அவர்களை சீக்கிரம் கண்டறிந்து, மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்கின்றோம், இறப்பு வீதத்தை குறைத்துள்ளோம். இந்த யுக்தி (Strategy)மாண்புமிகு அம்மாவின் அரசு, முதலமைச்சர் தெளிவா சொல்லி இருக்காங்க. எந்தவிதமான ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படைத் தன்மையோடு செயல்படுகிறது.

ஆதாரம் இல்லாமல் சொல்லாதீங்க:

எந்த கருத்தாக இருந்தாலும், நீங்கள் ஆதாரத்தோடு சொல்ல வேண்டும், புள்ளி விவரத்துடன் சொல்ல வேண்டும். பேரிடர் காலத்தில் ஒரு கருத்தை ஆதாரம் இல்லாமல் நிச்சயமாக சொல்ல வேண்டாம். அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசு, களத்திலே நின்று இரவு பகலாக பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் நீங்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள் மேலும் ஊக்குவிக்கக் கூடிய வகையில், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய வகையில், ஆறுதலான கருத்துக்களை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

ரொம்ப கஷ்டப்படுவாங்க:

ஏன்னென்றால் நைட்டு 12 மணிக்கு எல்லாம் தூங்கும் போது, வைரஸ் தாக்கக் கூடிய அந்த அறைக்குள்ள முழு கவச உடை அணிந்து கொண்டு இரவு முழுக்க லேப் டெக்னீசியன் 6 மணி நேரம்  சோதனை செய்து கொண்டு இருக்கின்றார்கள். இப்படியெல்லாம் சோதனை செய்து தான் காலையில் பதற்றத்தோடு இருப்பவருக்கு டெஸ்ட் ரிசல்ட் சொல்லுறோம். அதுல சொல்லும் போது நீங்க மறைக்கின்றோம் என்ற குற்றசாட்டை சொல்லும் போது நிச்சயமாக அவர்களை கஷ்டப்படுத்தும்.

என்னிடம் நிறைய பேர் சொல்லுறாங்க:

சர்… நாங்க வந்து ஏழு நாள் ட்யூட்டி பாக்குறோம்… ஏழுநாள் தனிமைப்படுத்திக்கிறோம்… குடும்பத்தினரோடு கூட இல்ல…  மருத்துவமனையின் சார்பாக அருகில் இருக்க கூடிய தனிமைப்படுத்தும் முகாம்களில் இருக்கிறோம்….  எங்களின் குழந்தை குட்டிகளை கூட பார்ப்பது கிடையாது….  விவாதத்தில் மறைக்கின்றோம் என்று சொல்லுறது எங்க மனசுக்கு கஷ்டமா இருக்கு சார்….. என்ன இப்படி எல்லாம் செய்திகளை வருது ? அப்படின்னு சொல்றாங்க. நம்மளோட கொரோனா செய்தி குறிப்பை பொறுத்தவரை ICMR, மத்திய அரசு எல்லாருமே இன்றைக்கு பாராட்டக் கூடிய அளவில்தான்  தமிழ்நாடு இருக்கின்றது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Categories

Tech |