Categories
மாநில செய்திகள்

“ஓசினு சொல்றீங்க” முதல்ல காச வாங்குங்க…. கொந்தளிக்கும் பெண்கள்….. சரமாரி கேள்வியால் பூதாகரமாக வெடித்த பிரச்சனை‌….!!!!

தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி பெண்களின் இலவச பேருந்து குறித்து கூறியது சமீபத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பான ஒரு வீடியோ கூட இணையத்தில் வெளியானது. இந்நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு அரசு பேருந்தில் துளசியம்மாள் என்ற ஒரு பெண்மணி பயணம் செய்தார். அந்த பெண்மணி நான் இலவசமாக செல்ல மாட்டேன் என்று கூறி நடத்துனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு நடத்துனரிடம் பணத்தை கொடுத்துவிட்டு டிக்கெட் பெற்றுக் கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோ தற்போது தீயாக பரவி வருவதால் மதுக்கரை போலீசார் அதிமுக கட்சியைச் சேர்ந்த 4 பேர் மீது பெண்மணியை தூண்டிவிட்டதாகாக கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து வேறு சில பகுதிகளும் சில பெண்கள் பேருந்தில் நாங்கள் இலவசமாக பயணம் செல்ல மாட்டோம் என்று நடத்துனரிடம் கூறி பணத்தை கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொள்கின்றனர். இது தொடர்பான வீடியோவை அதிமுக கட்சியினர் தங்களுடைய அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில் சில பெண்கள் நடத்துனரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது சில பெண்கள் அந்த மூதாட்டி கேட்பது நியாயம் தானே. நீங்க டிக்கெட் கொடுப்பீங்கனுதா நாங்க ரொம்ப நேரமா நிக்கிறோம். 3 பஸ் நிக்கல. இப்ப 4-வது பஸ்ல வரோம். எங்கள பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது. விலைவாசி எல்லாம் நாளுக்கு நாள் ஏறிட்டே இருக்கு. எத்தனை நாள் தான் இப்படி இலவசம் இலவசம்னு சொல்லி எங்களை ஏமாத்துவீங்க. எங்களை பார்த்து ஓசில போறீங்கன்னு வேற சொல்றீங்க. அவசியம் கிடையாது என்று கோபத்துடன் கூறுகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |