ராங்க் நம்பர் என்று கூறி பல பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தர்மபுரியை பகுதியை அடுத்த நூலஅள்ளி பகுதியில் வசிக்கும் ரவி என்பவர் தன்னுடைய செல்போனில் தொடர்பு கொண்டு மூன்று தினங்களாக ஆபாசமாக பேசுவதாகவும், ராங் நம்பர் என்று கூறி போன் மூலம் ஆபாசமாக மெசஜ்கள் அனுப்புவதாகவும் தகவல் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த அந்த பெண் தன்னுடைய கணவரிடம் கூறியுள்ளார்.
எனவே அவர் தன்னுடைய நண்பர்களின் உதவியோடு அந்த நம்பரை வைத்து முகவரியை தேடிக் கண்டு பிடித்து ரவிக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும் அவருடைய செல்போனை புடுங்கி ஆராய்ந்து பார்த்ததில், அவரும் அவருடைய நண்பர் நரசிம்மனும் பல பெண்களோடு எடுத்த புகைப்படம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் தர்மபுரியை சேர்ந்த திருமணமான பெண்களின் புகைப்படம் இருந்துள்ளது.
ரவி மற்றும் அவரின் நண்பர் நரசிம்மன் அதில் உள்ள பெண்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். அவர்களின் ஆபாச பேச்சுக்கு உடன்படும் பெண்களின் போன் உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, அந்த பெண்களிடம் அந்த புகைப்படத்தை காட்டி ஆசைக்கு இணங்க மிரட்டி வந்திருப்பதும் தெரியவந்ததுள்ளது. இவ்வாறு புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் ரவியை கைது செய்துள்ளனர்.