மறைந்த எஸ்பி ஜனநாதன் இயற்கை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தார் என நடிகர் ஷியாம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக இருந்தவர் எஸ்பி ஜனநாதன். இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தை இயக்கி வந்த இவர் கடந்த மார்ச் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இவரின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஷியாம், விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் வேலைகள் முடிவைத்ததும் ‘இயற்கை’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க எஸ்பி ஜனநாதன் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது மறைவால் இது நடக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.