Categories
தேசிய செய்திகள்

SBI-இல் வங்கி கணக்கு இருக்கா…? அப்ப நிறைய வருமானம் பெற…. இதை தெரிஞ்சிக்கோங்க…!!

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு எஸ்பிஐ வங்கி எவ்வளவு வட்டி விகிதங்கள் வழங்குகிறது என்று பார்க்கலாம்.

ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களின் விருப்ப தேர்வாக ஃபிக்ஸட் டெபாசிட்(நிலையான வைப்பு) திட்டங்கள் இருக்கின்றன. இருப்பினும், சிலகாலங்களாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு குறைவான வட்டியே வழங்கப்படுகிறது. மேலும் பல ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு சேவிங்ஸ் கணக்குக்கு நிகரான வட்டியே வழங்கப்படுகிறது. எனவே தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் மீதான ஆர்வம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்துள்ளது. இருப்பினும், சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்ட கணக்குகளுக்கு இன்னும் நல்ல வட்டி தான் வழங்கப்படுகிறது..

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்ட முடிவில், ரெபோ விகிதங்களை குறைக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதால், ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் இதற்கு மேலும் குறைக்கப்படாது என்பது தெளிவாகிவிட்டது. இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு 40 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் உள்ளனர். எனவே, ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு எஸ்பிஐ வங்கி எவ்வளவு வட்டி வழங்குகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

7 – 45 நாட்கள் : 2.9% – சீனியர் சிட்டிசன்களுக்கு 3.4%

46 – 179 நாட்கள் : 3.9% – சீனியர் சிட்டிசன்களுக்கு 4.4%

180 – 210 நாட்கள் : 4.4% – சீனியர் சிட்டிசன்களுக்கு 4.9%

211 நாட்கள் – 1 வருடங்கள்: 4.4% – சீனியர் சிட்டிசன்களுக்கு 4.9%

1 வருடம் – 2 வருடத்திற்குள் : 4.9% – சீனியர் சிட்டிசன்களுக்கு 5.4%

2 வருடம் – 3 வருடங்களுக்குள் : 5.1% – சீனியர் சிட்டிசன்களுக்கு 5.6%

3 வருடம் – 5 வருடங்களுக்குள் : 5.3% – சீனியர் சிட்டிசன்களுக்கு 5.8%

5 வருடம் – 10 வருடங்கள் வரை : 5.4% – சீனியர் சிட்டிசன்களுக்கு 6.2%

Categories

Tech |