Categories
தேசிய செய்திகள்

SBI கணக்கு வைத்திருப்பவர்களே!…. இதை யாரும் நம்பாதீங்க?…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

SBI கணக்கு வைத்திருப்போருக்கு பான்எண்ணை அப்டேட் செய்யுமாறு சில போலியான செய்திகள் வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது. அதாவது “அன்புள்ள வாடிக்கையாளரே, உங்களது SBI யோனாகணக்கு இன்று மூடப்பட்டது. தற்போது உங்களது பான் எண் விபரங்களைப் அப்டேட் செய்யவும்” என வங்கியில் இருந்து அனுப்புவது போன்று போலியான தகவல்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படுகிறது.

இது தொடர்பாக பிஐபி ஃபேக்ட் செக் அதன் அதிகாரபூர்வமான டுவிட்டர் பக்கத்தில், SBI வங்கியின் பெயரில் ஒரு போலி செய்தி வெளியிடப்படுவதாகவும், வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு தடுக்கப்படுவதைத் தவிர்க்க அவர்களின் பான்எண்ணைப் அப்டேட் செய்யுமாறும் கேட்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பிஐபி பொதுவாக மக்கள் தங்களது தனிப்பட்ட (அ) வங்கி விபரங்களைப் பகிர்ந்துகொள்ளக் கேட்கும் மின் அஞ்சல்கள் மற்றும் SMS-களுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது போன்ற போலியான செய்திகள் வரும் பட்சத்தில் மக்கள் [email protected] எனும் இணையதளத்தில் புகார் செய்யலாம். சென்ற திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் நவம்பர் 9 -15 வரை தன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் வாயிலாக எலெக்ட்டோரால் பாண்டுகளை வெளியிடுவதற்கும், பணமாக்குவதற்கும் எஸ்பிஐ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி நிதியமைச்சகம் வெளியிட்ட அதிகாரபூர்வமான அறிவிப்பில் “இந்திய மாநில ஆர் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), XXIII கட்ட விற்பனையில் 09/11/2022 முதல் 15/11/2022 வரை அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் வாயிலாக எலெக்ட்டோரால் பாண்டுகளை வெளியிடுவதற்கும் பணமாக்குவதற்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்து இருந்தது.

Categories

Tech |