Categories
தேசிய செய்திகள்

SBI, போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்ட பயனாளிகளுக்கு…. வட்டி விகிதம் எவ்வளவு?…. இதோ முழு விபரம்…..!!!!!

கொரோனா காலத்தில் பல தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டதால் பெரும்பாலானோர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தனர். இதனால் தங்களது பணத்தை பாதுகாப்பான முறையில் தங்களின் முதலீடுகளை செலுத்தத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக வங்கி மற்றும் இந்திய அஞ்சல் துறையில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. மேலும் இதில் முதலீடுசெய்வதால் பணத்துக்கு முழு பாதுகாப்பும் கிடைக்கிறது. இவற்றில் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் மிகுந்த பலன் கிடைக்கிறது.

இதன் காரணமாக இந்தத் திட்டத்தில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஏராளமானோர் இணைந்து உள்ளனர். இதில் தங்களின் தேவைகளை பொறுத்து முதலீடு செய்யும் காலத்தை தீர்மானித்துக்கொள்ளலாம். பிக்ஸ்ட் டெபாசிட் திட்டம் வங்கிகளை காட்டிலும் அஞ்சல் அலுவலகத்தில் தான் அதிக அளவு லாபங்களை பெற முடிகிறது. அந்த வகையில் வங்கிகளில் இந்த திட்டத்திற்கு 5.5 % மட்டுமே வட்டி கிடைக்கிறது. எனினும் அஞ்சல் அலுவலகத்தில் இந்த திட்டத்திற்கு 6.7 % வட்டி கிடைக்கிறது. மேலும் SBI வங்கியில் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

சென்ற பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள வட்டி விகிதம் தொடர்பாக விரிவாக பார்ப்போம். இவற்றில் கணக்கு தொடங்கும் அனைவருக்கும் 2.9 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மூத்த குடிமக்களுக்கு 3.4 சதவீதம் முதல் 6.30 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதேபோன்று அஞ்சல் அலுவலகத்தில் 1-5 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். மேலும் இதில் 1 ஆண்டு முதல் 3 வருடங்கள் வரை முதலீடு செய்வதால் 5.5 சதவீதம் வட்டி கிடைக்கிறது. அதுமட்டுமின்றி 5 வருட காலம் முதலீடு செய்வதால் 6.7 சதவீத வட்டி விகிதம் வரை கிடைக்கிறது.

Categories

Tech |