எஸ்பிஐ வங்கி முதல் ஐசிஐசிஐ வங்கி வரை எந்த வங்கியில் லாக்கர் கட்டணம் எவ்வளவு உள்ளது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
நம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள், பணம் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைப்பது பாதுகாப்பானது. இந்த சேவைக்கு லாக்கரின் அளவிற்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சில வங்கிகள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு தொகையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் வழங்குகின்றன. அளவு மற்றும் நகரத்தை பொருத்து ரூபாய் 500 முதல் 3000 வரை கிடைக்கிறது.
ஐசிஐசிஐ வங்கி:
இந்த வங்கியில் ஒரு வருடத்திற்கு முன்பே லாக்கர் வாடகையை வசூலிக்கின்றன. வங்கியில் சிறிய அளவிலான லாக்கருக்கு 1200 முதல் 5000 வரை வசூல் செய்கின்றது. அதே சமயம் பெரிய அளவிலான லாக்கருக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது.
பஞ்சாப் நேஷனல் வங்கி:
இந்த வங்கியில் லாக்கரின் வாடகை ரூ. 1,250 முதல் 10,000 முதல் செய்யப்படுகின்றது. நகர்ப்புறங்களில் 2,000 முதல் 10,000 வரை வசூல் செய்யப்பட்டு வருகின்றது.
ஆக்சிஸ் வங்கி:
வங்கியில் நகர்புற கிளைகளில் லாக்கர் கட்டணம் 2700 முதல் தொடங்குகிறது. இந்த கட்டணம் 6 ஆயிரம் வரை உள்ளது. பெரிய அளவுக்கு 10,800 முதல் 12 ஆயிரத்து 900 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
எஸ்பிஐ வங்கி:
இந்த வங்கியை பொருத்தவரை 500 முதல் 3000 வரை கிடைக்கின்றது. சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான லாக்கர்களுக்கு மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் முறையே 2000, 4000, 8000, 12000 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.