Categories
தேசிய செய்திகள்

SBI வங்கியில் இனி உடனடியாக கடன் வாங்கலாம்…. எப்படி தெரியுமா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் எஸ்பிஐ வங்கி யோனோ செயலியில் ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட் என்ற புதிய திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது. மாத சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக கடன் வழங்கும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த சேவை மையம் மூலமாக 35 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்த திட்டம் எஸ்பிஐ வங்கியின் பர்சனல் லோன் பிரிவின் டிஜிட்டல் வடிவமாக விளங்குகின்றது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கியில் இனி உடனடியாக கடன் வாங்கிக் கொள்ளலாம்.

Categories

Tech |