இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் 65 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வட்ட ஆலோசகர் , மேலாளர் கடன் ஆய்வாளர், மேலாளர் மற்றும் பிற துறைகளில் மொத்தம் 65 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க sbi.co.in/web/careers என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.