இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளையும், பல்வேறு திட்டங்களையும் அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க மறுபுறம் அடிக்கடி வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். எதற்கு அடிக்கடி பணத்தை எடுக்கிறார்கள் என்று வாடிக்கையாளர்கள் புலம்புவதுண்டு.
இந்நிலையில் எஸ்பிஐ வங்கி ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து ரூபாய் 300 கோடிக்கு மேல் அபராதம் வசூலித்துள்ளதாக மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜீரோ பேலன்ஸ் கணக்கில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் 17.70 கட்டணம் ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்பட்டது. மேலும் மினிமம் பேலன்ஸ் இல்லாத வாடிக்கையாளர்களிடமும் அளவுக்கு மீறி கட்டணம் வசூலித்ததாக ஐஐடி ஆய்வில் தெரியவந்துள்ளது.