Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு… ரூ.2 லட்சம்… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய பிரதமர் மோடியின் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு நிதியுதவிகள் ஜன் தன் யோஜனா திட்டத்தில் பயனாளிகளுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. மாநில அரசு திட்டங்களின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அதற்கான தொகை உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் கணக்குகளின் கீழ் ரூபே காடுகளுக்கு விண்ணப்பித்தால் காப்பீடு வசதி பெறலாம் என்று இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜன் தன் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூபே கார் புக்கிங் விண்ணப்பித்த 2 லட்சம் வரையில் விபத்து காப்பீடு வசதியை பெற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமன்றி எஸ்பிஐ வங்கியின் இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை கணக்கு தொடங்கியவர்களும், இனி கணக்கு தொடங்குபவர்களும் இந்த சலுகையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. இந்த காப்பீட்டு வசதியைப் பெறுவதற்கு ஆதார் எண் மிகவும் அவசியம்.

மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஆதாருடன் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக மார்ச் 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்காத அவர்கள் இன்னும் இரண்டு வாரங்களில் இணைப்பது பயனளிக்கும். அதன்பிறகு எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள இந்த காப்பீடு வசதியை பெற்றுக் கொள்ளலாம்.

Categories

Tech |