நிலை வைப்பு கணக்குகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்று அழைக்கப்படும் இந்த வங்கி இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகும். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கணக்குகள் வைத்துள்ளனர். அதில் பலரும் ஃபிக்ஸட் டெபாசிட் என்று அழைக்கப்படும் நிலை வைப்பு கணக்குகள் வைத்துள்ளனர். அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி ஒன்றை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் நேரடி கணக்கிலிருந்து பணம் திருடாமல் எப்.டி கணக்குகளில் இருந்து பணத்தைத் திருடி வருவதாக எச்சரித்துள்ளனர். இதனால் எப்.டி சம்பந்தமாக யாராவது வங்கியிலிருந்து அழைப்பதாக கூறினால் தகவலை யாரும் பகிர வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.