இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது பயனர்களுக்கு அபபோத புதிய சேவைகளை வழங்கி வருகிறது. அதாவது பல்வேறு வங்கிகளில் வாட்ஸ்அப் மூலமாக வங்கியில் அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். பண பரிமாற்றம்,இருப்பில் உள்ள தொகை என அனைத்து செயல்பாடுகளையும் வாட்ஸ்அப் மூலமாக வாடிக்கையாளர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான sbi வங்கியும் வாட்ஸ் அப் மூலமாக வங்கி சேவை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்கின் எண்ணை whatsapp அக்கவுண்டுடன் இணைத்து விட்டால் வங்கி இருப்புத் தொகை மற்றும் பணப் பரிமாற்றம் என அனைத்து சேவைகளையும் பெற முடியும்.
எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே whatsapp சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி கணக்கை வாட்ஸப் அக்கவுண்ட் உடன் எளிதில் இணைத்து விடலாம். அதற்கு முதலில் SBI வங்கியுடன் தொடர்புடைய உங்கள் எண்ணில் இருந்து 5676791 என்ற எண்ணுக்கு WAOPTIN XXXX என்ற குறுஞ்செய்தி ஒன்றை அனுப்ப வேண்டும். இதில் XXXX என்பது எஸ்பிஐ கார்டின் பின்பக்கத்தில் உள்ள நான்கு இலக்க எண்ணாகும்.
இந்த குறுஞ்செய்தியை நீங்கள் அனுப்பியவுடன் sbi வங்கியின் 9022690226 என்ற எண்ணில் இருந்து உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதற்கு அடுத்ததாக அந்த எண்ணை சேவ் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த எண்ணிற்கு Hi SBI என்று நீங்கள் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் அனுப்பியவுடன், dear customer welcome to SBI WhatsApp banking service என்கின்ற குறுஞ்செய்தி ஒன்று உங்களுக்கு வரும். அதன் பிறகு கணக்கு சுருக்கம், வெகுமதி புள்ளிகள் மற்றும் நிலுவைத் தொகை, அட்டைப்படம் செலுத்துதல் ஆகிய அனைத்து சேவைகளையும் நீங்கள் தொடர முடியும்.