மோசடிகளை தடுக்க SBI வங்கி ATM ல் பணம் எடுக்கும்போது OTP அனுப்பப்படுகிறது. அதை சரியாக உள்ளீடு செய்யும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் பணம் பெற்றுக்கொள்ள முடியும். நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி 10,000 அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பாதுகாப்பு விதிகளை ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
ஏடிஎம்மில் எவ்வளவு பணம் தேவை என்பதை பதிவிட்ட பிறகு OTP கேட்கப்படும். அதில் உங்கள் பின் நம்பரோடு ஓடிபியை பதிவிட வேண்டும். பதிவிட்ட பிறகு உங்களுக்கான பணம் ஏடிஎம்மில் வந்துவிடும். மோசடி கும்பலிடம் இருந்து பணத்தை பாதுகாக்க இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.