எஸ்பிஐ (SBI) வங்கி தனது கடன்களுக்கான வட்டி விகிதத்தை நேற்று (ஆகஸ்ட் 15) முதல் உயர்த்தியுள்ளது. கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால் வீட்டுக் கடன், கார் கடன், இருசக்கர வாகன கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும். கடன் வாங்கியவர்கள் செலுத்தி வரும் EMI தொகையும் உயரும். குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.20 % உயர்த்தி உள்ளது. கடந்த மாதம், எஸ்.பி.ஐ, எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி இருந்தது. வட்டி விகித உயர்வால், வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான இ.எம்.ஐ அதிகரிக்கும்.
இதேபோல், எஸ்.பி.ஐ, கடந்த வாரம் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதன்படி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்புகளுக்கு பொதுமக்களுக்கு 2.90 முதல் 5.65 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.40 சதவீதம் முதல் 6.45 சதவீதமாக வட்டி விகிதத்தை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. எஸ்.பி.ஐ.யின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.