மத்திய அரசு மக்கள் அனைவரையும் ஆதார் அட்டை அல்லது வங்கிக் கணக்குடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அப்படி இணைக்கவில்லையென்றால் உங்கள் பான் கார்டு செயல் இழந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான் கார்டை வங்கி கணக்குடன் இணைப்பதற்கு முன்னதாக அதிக அளவிலான கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது அளிக்கப்பட்டுள்ள அவகாசத்திற்குள் பான் கார்டை இணைக்க தவறினால், கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் SBI வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்பு வங்கிக் கணக்குடன் பான் கார்டை இணைக்க அறிவுறுத்தி, அதற்கான வழிமுறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- SBI இன்டர்நெட் பேங்கிங் போர்ட்டல் www.onlinesbi.com என்ற இணையதள முகவரி மூலம் பான் கார்டு இணைக்கப்படுகிறது. எனவே முதலில் www.onlinesbi.com என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
- இதையடுத்து திரையின் இடது பேனலில் தோன்றும் “எனது கணக்குகள்” என்பதன் கீழ் “சுயவிவர-PAN பதிவுக்கு” செல்லவும்.
- அதன் பிறகு அடுத்த பக்கத்தில், கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுத்து, பான் எண்ணை உள்ளிட்டு கிளிக் செய்து, சமர்ப்பிக்க வேண்டும்.
- உங்கள் கோரிக்கை செயலாக்கத்திற்காக கிளைக்கு அனுப்பப்படும்.
- கிளை உங்கள் கோரிக்கையை 7 நாட்களில் செயல்படுத்தும்.
- மேலும் உங்கள் கோரிக்கையின் நிலை குறித்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்களுக்கு அறிவுறுத்தப்படும்.
- இதனை தொடர்ந்து நேரடியாக SBI கிளை மூலம் பான் எண்ணை இணைக்க உங்கள் அருகிலுள்ள SBI கிளைக்கு, பான் கார்டின் நகலை எடுத்துச் செல்ல வேண்டும்.
- அதன் பின் அதற்காக உள்ள கோரிக்கை படிவத்தை முறையாக நிரப்ப வேண்டும்.
- மேலும் இந்த படிவத்தை பான் கார்டின் ஜெராக்ஸ் உடன் சமர்ப்பிக்க வேண்டும்.
- இதையடுத்து தேவையான சரிபார்ப்புக்குப் பின், வங்கிக் கணக்குடன் பான் கார்டு இணைப்பானது கிளை மூலம் செய்யப்படும்.
- மேலும் இணைப்பின் நிலை குறித்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.