எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மார்ச்-31 ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இல்லையெனில் வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்று எஸ்பிஐ எச்சரித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆதார்-பான் கார்டுகளை இணைக்காவிட்டால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களின் எஸ்பிஐ கார்டு செயல்படாது. ஆகவே வாடிக்கையாளர்கள் வருமான வரித்துறையின் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆதார்-பான் கார்டுகளை இணைக்க வேண்டும்.
ஆன்லைனில் SBI வாடிக்கையாளர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் செல்ல வேண்டும்.
பின் லிங்க் ஆதார் என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
அப்போது விபரங்களை உள்ளிட வேண்டிய புதிய பக்கத்திற்கு செல்வீர்கள்
ஆதார் கார்டில் உங்களின் பிறந்த தேதி மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தால் “ஆதார் அட்டையில் நான் பிறந்த வருடம் மட்டுமே உள்ளது” (I have only year of birth in the Aadhaar card) என்ற செக்பாக்ஸை டிக் செய்ய வேண்டும்.
இந்நிலையில் ஒடிபி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்ததாக லிங்க் ஆதார் என்ற டேப்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
இந்தமுறை மட்டுமின்றி எஸ் எம் எஸ் வழியாகவும் நீங்கள் ஆதார் பான் எண்ணை இணைக்கலாம். மார்ச் 31 வரைக்கும் தான் அவகாசம் என்பதை மறந்து விடாதீர்கள்.