இந்தியா முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு 45 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் தங்களது பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக எஸ்பிஐ வங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு என அறிவித்திருந்தது.
இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் கடைசி தேதிக்குள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கும்படி எஸ்பிஐ வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்பிஐ வங்கி, “அனைவரும் இடையூறு இல்லாமல் வங்கி சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த வாடிக்கையாளர்கள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
ஒருவேளை பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலிழந்துவிடும். மேலும் எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் பான் கார்டை பயன்படுத்த முடியாது. எனவே பான் கார்டடை ஆதாருடன் இணைக்க விரும்புவோர் வருமானவரித்துறை இணையத்தில் ஆன்லைனிலேயே இணைத்துவிடலாம்.