Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே உஷார்…! இதை செய்யவே செய்யாதீங்க…. உங்களுக்கான ALERT அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இதிலிருந்து தப்பிப்பதற்கு அவ்வப்போது அறிவுரைகளை அரசு சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த மோசடிகள் ஸ்மார்ட்ஃபான்கள் மூலமாக நடப்பதாகவும் பொதுமக்கள் ஏமாறாமல் இருப்பதற்கு வங்கிகளின் நம்பகத்தன்மை அறிய வங்கிகளின் இணையதளங்களில் கிளைகளில் லொகேஷன் வசதியை குறிப்பிட்டு உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

இந்த வகையில்SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் PAN அப்டேட் செய்யும்படி சில போலி SMS வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதில் அன்புள்ள வாடிக்கையாளரே உங்கள் SBI YONO கணக்கு நிறுத்தப்பட்டது. உங்கள் PAN விவரங்களைப் அப்டேட் செய்ய கிளிக் செய்க என்று வங்கியிலிருந்து அனுப்புவது போன்று வாடிக்கையாளருக்கு SMS அனுப்பப்படுகிறது. இதுபோன்று வரும் link-ஐ யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |