Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே!… ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கணுமா?… இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

ஏராளமானோர் ஏடிஎம் மூலம் அவ்வப்போது பணம் எடுப்பது வழக்கம். இதற்கிடையில் ஏ.டி.எம் மூலம் பணம் எடுப்பதற்குரிய விதிகள் அண்மையில் மாற்றப்பட்டது. ஏ.டி.எம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு SBI விதிகளை மாற்றி இருக்கிறது. அந்த புது விதிகள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். SBI ஏ.டி.எம்-மிலிருந்து பணம் எடுப்பதற்கு ஓடிபி-ஐ உள்ளிட வேண்டும். தற்போது புது விதியின் கீழ் வாடிக்கையாளர்கள் ஓடிபி இன்றி பணத்தை எடுக்க முடியாது. பணம் எடுக்கும் சமயத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போனில் ஓடிபி-ஐப் பெறுவார்கள். அதனை உள்ளிட்ட பிறகுதான் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுக்க முடியும். இதற்கு முன்பாக இந்த தகவலை வங்கி ஒரு ட்வீட் வாயிலாக தெரியப்படுத்தியது. SBI ஏ.டி.எம்-களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான எங்களது ஓடிபி அடிப்படையிலான பணம் எடுக்கும் முறை மோசடி செய்பவர்களுக்கு எதிரானவை ஆகும்.

ஆகவே மோசடியிலிருந்து மக்களை பாதுகாப்பதே எங்களுடைய முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். ஓ.டி.பி அடிப்படையில் பணத்தை எடுக்கும்முறையானது  எவ்வாறு செயல்படும் என்பதை SBIவாடிக்கையாளர்கள் அறிந்திருக்கவேண்டும் என வங்கி டுவீட்டில் தெரிவித்து இருந்தது. இந்த விதிகள் ரூபாய் 10,000 மற்றும் அதற்கு மேல் உள்ள தொகைக்கு பொருந்தும். SBIவாடிக்கையாளர்கள் தங்களது ஏ.டி.எம்-மிலிருந்து ஒவ்வொரு முறையும் ரூபாய் 10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை எடுப்பதற்கு அவர்களின் வங்கிக்கணக்கிலிருந்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி மற்றும் டெபிட்கார்டு பின்னை உள்ளிடவும்.

# SBI ஏ.டி.எம்-மிலிருந்து பணம் எடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் ஓடிபி-ஐ உள்ளிடவும்.

# பின் உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பப்படும்.

# ஒரு பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர் 4 இலக்க எண்ணுடன் ஓ.டி.பி- ஐப் பெறுவர்.

# வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஓடிபி-ஐ பணம் எடுக்கும் திரையில் உள்ளிடவேண்டும்.

இந்த விதிகள் என்ன காரணத்திற்காக உருவாக்கப்பட்டது?

இந்த விதியை உருவாக்குவது தொடர்பாக கூறிய வங்கி, வாடிக்கையாளர்களை மோசடியிலிருந்து பாதுகாக்க இவ்விதி வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI இந்தியாவில் 71,705 பிசி அகவுண்டுகளுடன் 22,224 கிளைகள் மற்றும் 63,906 ஏடிஎம்/சிடிஎம்களுடன் மிகப்பெரிய நெட்வொர்காக இருக்கிறது.

Categories

Tech |