தங்க முதலீட்டு பத்திரத்தை வாங்குபவர்களுக்கு எஸ்பிஐ வங்கி 500 ரூபாய் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தங்கம் வாங்குபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விலை குறையுமா? என்று எதிர்பார்ப்பது பலரும் காத்திருக்கின்றனர். இது போன்ற சூழ்நிலையில் தங்கம் வாங்க ஒரு அரிய வாய்ப்பு வந்துள்ளது. தங்க முதலீட்டுக்கான அடுத்தகட்ட விற்பனையை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த விற்பனை நடைபெறும். இந்த முறை தங்கம் கிராமுக்கு 4,732 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதுவும் அதிகம் என்று நினைக்கும் வாடிக்கையாளர்கள் 50 ரூபாய் தள்ளுபடி பெறலாம். ஆன்லைன் மூலம் பத்திரங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. இதுமட்டுமில்லாமல் மேலும் 500 ரூபாய் வரை தள்ளுபடியை நம்மால் பெறமுடியும். இதற்கான சிறப்பு சலுகையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் மூலம் தங்க முதலீட்டு பத்திரங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 கிராமிற்கு 500 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.