Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்கள் இனி…. வங்கி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முக்கியமான மாற்றங்களை செய்துள்ளது. இனி, எஸ்பிஐ யோனோ செயலியில், வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணைக் கொண்டுள்ள போனிலிருந்து மட்டுமே லாக் இன் செய்ய முடியும். ஆன்லைன் வங்கி மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க எஸ்.பி.ஐ வங்கி இப்படிச் செய்துள்ளது.

இந்த நாட்களில் ஆன்லைன் மோசடி வழக்குகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, இந்த புதிய மேம்படுத்தல் யோனோ செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான வங்கி அனுபவத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், ஆன்லைன் மோசடிகளுக்கு ஆளாவதையும் தவிர்க்க முடியும்.

 

வாடிக்கையாளர் தங்கள் வங்கிக் கணக்கில் பதிவு செய்துள்ள அதே போனை புதிய பதிவுக்கு பயன்படுத்த வேண்டும் என வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. அதாவது, இப்போது எஸ்பிஐ யோனோ கணக்கு வைத்திருப்பவர்கள் வேறு மொபைல் எண்ணில் லாக் இன் செய்ய முயற்சித்தால், அவர்கள் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Categories

Tech |