Categories
தேசிய செய்திகள்

SBI வாயிலாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தல்…. எப்படின்னு தெரியுமா?… இதோ உங்களுக்கான வழிமுறைகள்…..!!!!

SBI வாயிலாக எப்படி ஆயுள்சான்றிதழை சமர்ப்பிப்பது என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

# SBI-ன் அதிகாரபூர்வமான பென்ஷன் சேவா இணையதளபக்கத்திற்கு செல்லவும் (அ) பென்ஷன் சேவா எனும் செயலியை மொபைலில் டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும்.

# இணையதளபக்கத்தில் மேலேயுள்ள வீடியோஎல்சி என்பதை க்ளிக் செய்ய வேண்டும். பின் அவற்றில் கீழே “வீடியோ ஆயுள் சான்றிதழ்” என்ற ஆப்ஷனை தேர்வுசெய்யவும்.

# தற்போது ஓய்வூதியம் பெறும் கணக்கு எண்ணை உள்ளிட்டு பிறகு கேப்ட்சாவை உள்ளிடவும். உங்களது ஆதார் விபரங்களை வங்கி பயன்படுத்த பாக்ஸை சரிபார்க்க வேண்டும்.

# அடுத்ததாக கணக்கை சேர்ப்பார் என்பதை க்ளிக்செய்ய வேண்டும். உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.

பின் அதில் தேவையான சான்றிதழ்கள் அனைத்தையும் சமர்ப்பித்த பிறகு ப்ரொசீட் என்பதனை க்ளிக் செய்யவும்.

# வீடியோ அழைப்புக்கான அப்பாயின்ட் மென்டை பெற இணையதளபக்கத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். SMS (அ) மின் அஞ்சல் மூலம் உங்களுக்கு உறுதிப்படுத்துதல் செய்தி அனுப்பப்படும்.

# தற்போது உங்களது விருப்பத்தின் அடிப்படையில் வீடியோகாலில் இணைந்துகொள்ள முடியும்.

# வங்கி அதிகாரி உடனான அழைப்பில் வெரிபிகேஷன்கோடை சரிபார்க்கவும். அடுத்ததாக உங்களது பான்கார்டை காண்பிக்கவேண்டும்.

# சரிபார்ப்பு முடிந்தபின், வங்கி அதிகாரி உங்களை படம் பிடிக்க ஏதுவாக நீங்கள் நன்கு நிமிர்ந்து அமரவேண்டும்.

# அதனை தொடர்ந்து ஓய்வூதியதார்களுக்கு ஆயுள்சான்றிதழின் நிலை பற்றிய செய்தி தெரிவிக்கப்படும்.

Categories

Tech |