உங்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடு போய்விட்டால் இந்த நம்பருக்கு அழைத்து நீங்கள் அதனை லாக் செய்யலாம். அந்த வசதியை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஏதாவது ஒரு வங்கியில், கணக்கு வைத்துள்ளோம். அதற்கு ஏடிஎம் கார்டையும் வைத்துள்ளோம். பணம் எடுப்பதற்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அந்த ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடு போய்விட்டால் நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வேறு யாராவது திருடி விடுவார்களோ என்ற பயம் நமக்கு இருக்கும். ஆனால் இனி நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.
கார்டு தொலைந்து விட்டால் அதை உடனே பிளாக் செய்து கொள்ளலாம். அதற்கான வசதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்குகிறது. மற்ற வங்கிகளும் இந்த வசதி உள்ளது. தொலைந்துபோன அல்லது திருடுபோன ஏடிஎம் கார்டை நீங்கள் லாக் செய்வதற்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மொபைல் போன் மூலம் டோல் பிரீ எண்ணுக்கு அழைத்து கார்டை லாக் செய்து கொள்ளலாம்.
1800 112 211 அல்லது 1800 425 3800 இந்த நம்பருக்கு அழைத்து உங்கள் ஏடிஎம் கார்டை நீங்கள் லாக் செய்யலாம். இந்த எண்ணிற்கு வங்கி கணக்கோடு இணைக்கப்பட்ட மொபைல் மூலம் அழைத்து 0 வை அழுத்தவும். அதன்பின் 1ஐ அழுத்தி மொபைல் எண் மற்றும் ATM கார்டின் கடைசி ஐந்து எண் அல்லது 2 ஐ அழுத்தி மொபைலின் மற்றும் வங்கி கணக்கு எண்ணின் கடைசி ஐந்து எண்களை பதிவிட்டால் போதும் உங்களுடைய ஏடிஎம் கார்டு பிளாக் ஆகிவிடும். பின்னர் நீங்கள் இதன் மூலம் புதிய கார்டு விண்ணப்பிக்கவும் முடியும்.