Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே! உங்கள் பணத்திற்கு ஆபத்து…. எச்சரிக்கையாக இருங்கள்…!!

கடன் ஆப் மோசடி குறித்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது அதிகாரப்பூர்வமற்ற டிஜிட்டல் தளங்கள் மற்றும் செல்போன் செயலிகள் மூலமாக உடனடி கடன் வழங்குவதாக கூறி பல கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருக்குமாறு எஸ்பிஐ வாங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கியின் டுவிட்டர் பக்கத்தில், உடனடி கடன் மோசடி குறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எஸ்பிஐ அல்லது வேறு பெயரில் அதிகாரப்பூர்வமற்ற லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் இந்த தளங்களில் உங்களுடைய விவரங்களை கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் ஆன்லைன் மோசடி கும்பலிடம் இருந்து பாதுகாப்பது சில வழிமுறைகளையும் கொடுத்துள்ளது.

பாதுகாப்பு வழிமுறைகள்:

முதலில் கடன் கொடுக்கும் ஆஃபரின் நிபந்தனைகளை படித்து பார்க்க வேண்டும்

சந்தேகத்திற்கு இடமான லிங்குகளை கிளிக் செய்யக்கூடாது.

கடன் ஆப்பை பதிவிறக்கம் செய்வதற்கு முன் அதன் உண்மைத்தன்மை குறித்து சரிபார்க்க வேண்டும்.

கடன் தேவைப்படுபவர்கள் எஸ்பிஐ வங்கியிலோ, யோனோ போன்ற செல்போன் செயலியிலோ கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என தனிநபர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.

Categories

Tech |