Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட RBI…. களமிறங்கும் மாநிலங்கள்…. கொரோனாவுக்கு ஆப்பு ..!!

கொரோனாவுக்கு எதிராக ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முடிவு அனைத்து மாநில அரசுக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் மிக அதிக அளவுக்கு சரிந்துள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. கொரோனா ஆச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் ஒட்டு மொத்தமும் முடங்கிக் கிடப்பதால் ஏற்றுமதி வர்த்தகம் போன்ற நடவடிக்கைகள் நிகழாமல் நாட்டின் வளர்ச்சி சரிவு கண்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,கொரோனாவால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ரிசர்வ் வங்கி மிகத் தீவிரமாக கண்காணிக்கிறோம். இதனால் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. கொரோனா எதிரொலியாக பொருளாதார பாதிப்புகளை  மீட்க பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கருத்துகளை கேட்டு அறிந்துள்ளோம். வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதிசெய்துள்ளது.

இக்கட்டான சூழ்நிலையில் வங்கிகளும் இயங்குகின்றன.கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாகத் தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய பொருளாதார சவால். கொரோனவால் உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வராமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம். இந்த ஆண்டில் நெல் பயிரிடும் பரப்பளவு 37 சதவீதமாக அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் வாகன உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.2021 -22 இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 இருக்கும்.

 

கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்ற தன்மையை நீடிக்கிறது. சர்வதேச நிதியம் இந்தியாவின் வளர்ச்சி 1.9 கணித்துள்ளது. ஜி 20 நாடுகளிலேயே அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. கொரோனா காரணமாக நாட்டின் மின்சாரத் தேவை 20 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. தொழிற்சாலைகள் இயங்காததால் நாட்டின் மின்சார தேவை 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் இணையப் பயன்பாடு மற்றும் இணையதள பணப்பரிமாற்ற தேவை அதிகரித்துள்ளது.

அரிசி கோதுமை ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு இருக்காது. இந்தியாவில் அரிசி கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு இருக்காது. தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆர்பிஐ வங்கிகளுக்கு போதுமான ரூபாய் நோட்டுகளை தந்துள்ளது. சிறு குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போதைய கொரோனா பாதிப்பு பொருளாதாரத்தில் சவாலாக உள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி வீதம் 4%லிருந்து  3.75 %ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறும் வகையில் ரிவர்ஸ் ரெப்போ வட்டி வீதம் 0.25 சதவீதமாக குறைக்கபட்டுள்ளது.இதனால் நாட்டின் ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வராமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம். இந்த ஆண்டில் நெல் பயிரிடும் பரப்பளவு 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.மார்ச் மாதம் வாகன உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

2021 -22 இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 இருக்கும். கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்ற தன்மையை நீடிக்கிறது. சர்வதேச நிதியம் இந்தியாவின் வளர்ச்சி 1.9 கணித்துள்ளது. ஜி 20 நாடுகளிலேயே அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. கொரோனா காரணமாக நாட்டின் மின்சாரத் தேவை 20 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை குறைந்துள்ளது.இந்த ஆண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37 சதவீதம் அதிகரித்துள்ளது. அவசர தேவைக்காக ரிசர்வ் வங்கியிடமிருந்து 60% வரை கூடுதலாக மாநில அரசுகள் கடன் பெறலாம்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர் செய்வதற்காக மாநில அரசு கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். கொரோனா வைரசுக்கு எதிராக மாநில அரசுக்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு அதிகளவில் நிதி தேவை படுகின்றது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் இந்த அறிவிப்பு மாநில அரசுக்களை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது. இனி மேல் மாநில அரசுக்கள் கொடூரமாக பரவிவரும் கொரோனவை அசுரத்தனமாக கட்டுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

 

 

 

 

Categories

Tech |