இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்தே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் எஸ்பிஐயின் யோஜனா ஆப் மூலம் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்யலாம். இந்த செயலி மூலமாக எஸ்பிஐயில் புதிய கணக்கை தொடங்கலாம். மேலும் பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யலாம்.
வீட்டு கடன், கல்விக் கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், ரயில் டிக்கெட் புக் செய்தல் ஆகிய வேலைகளை இந்த செயலி மூலம் செய்ய முடியும். அதுமட்டுமின்றி அனைத்து விதமான பண பரிமாற்றங்களையும் ஆன்லைன் மூலமாக செய்யலாம். நீங்கள் பணம் எடுத்தாலும் அல்லது டெபாசிட் செய்தாலோ உடனடியாக உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும். ஒருவேளை நீங்கள் என்னை மாற்றினாலோ, புது நம்பர் வாங்கினாலோ அதை உடனடியாக வங்கிக்கு தெரியப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தற்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் செல்போனுக்கு வரும் ஓடிபி வரும் அந்த எண்ணை பதிவிட்டால் மட்டுமே நீங்கள் பணம் எடுக்க முடியும். அதனால் செல்போன் எண் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கியமானது ஆகும். அதனால் நீங்கள் மொபைல் எண்ணை மாற்றினால் வங்கி செல்லாமல் ஆன்லைன் மூலமாக கூட அதை அப்டேட் செய்யலாம். http://www.onlinesbi.com என்ற இணையப்பக்கத்தில் My accounts என்ற பிரிவில் Profile – personal details – change mobile number என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் வரும் பக்கத்தில் வங்கி எண் மற்றும் புதிய மொபைல் நம்பர் பதிவிட்டு submit கொடுக்க வேண்டும். அதன்பின் உங்கள் மொபைல் எண் மாறிவிடும்.