SBI வங்கி அதன் கார்டுகள் மற்றும் பேமென்ட் சர்வீசஸில் சில புது விதிகளை திருத்தியமைத்துள்ளது. இந்த புது விதிகளானது ஜனவரி 2023 முதல் நடைமுறைபடுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக SBI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வவுச்சர் மற்றும் ரிவார்டு பாயிண்டுகளை பெறுவதற்குரிய 2 விதிகள் 2023 ஆம் வருடம் முதல் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிம்ப்ளி க்ளிக் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் க்ளியர்ட்ரிப் வவுச்சரை ஒரேஒரு ட்ரான்ஸாக்ஷனில் மட்டுமே பெற இயலும் மற்றும் இதை எவ்வித வவுச்சருடனும் இணைக்க முடியாது. வணிகர் இஎம்ஐ ட்ரான்ஸாக்ஷன்களுக்குரிய ப்ராசஸிங் கட்டணம் வரிகளுடன் சேர்த்து ரூபாய். 199 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ப்ராசஸிங் கட்டணம் வரிகளுடன் சேர்த்து ரூபாய். 99 ஆக இருந்தது. ஆனால் தற்போது இதன் அளவும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது..