தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய திரையுலகினர் கூட்டுப் பிரார்த்தனை செய்துள்ளனர்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைந்து திரும்பி வர வேண்டுமென, திரையுலகினர் பலர் காணொலி காட்சி வாயிலாக கூட்டு பிரார்த்தனை செய்தனர். இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.வி. உதயமார், கங்கை அமரன், நடிகர்கள் சிவக்குமார், பிரபு, பார்த்திபன், சரத்குமார், சத்யராஜ், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, மேலும் இசையமைப்பாளர்கள் தேவா, தீனா, பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாடகர்களான மனோ, சித்ரா உள்பட பலர் அதில் பங்கேற்று தங்களது பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.
அந்தக் கூட்டுப் பிரார்த்தனையின் வழியாக எஸ்பிபியின் பாடல்களை பாடியதோடு மட்டுமில்லாமல், அவருடன் இருந்த நினைவுகளையும் அந்தப் பிரார்த்தனையில் பலர் பகிர்ந்து கொண்டனர். இது மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு இடங்களிலும் எஸ்பிபி குணமடைய ரசிர்கர்கள் வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.