மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி பிறந்தநாளை முன்னிட்டு அவரது நெருங்கிய நண்பரான கமலஹாசன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் கமலஹாசன் தனது நெருங்கிய நண்பரும், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் நண்பருக்காக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/ikamalhaasan/status/1400745306564677632