ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் நிதி சார்ந்த பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தாட்கோ மூலம் தேர்வு செய்யப்படும் நூறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நிதி மேலாண்மை,காப்பீடு மற்றும் வங்கி சேவை போன்ற நிதி சார்ந்த தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இவர்கள் ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் செமஸ்டர் தேர்வின் இறுதி பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் இது குறித்து கூடுதல் தகவல்களை அறிய சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் எனவும் கூடுதல் விவரங்களுக்கு 04425246344 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.