Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

2020 BIG SCAM : மக்களே உஷார்….. உடனடியாக இந்த APP இருந்தா UNINSTALL பண்ணிடுங்க….!!

இன்றைய காலகட்டத்தில் மிக சுலபமாக பணம் சம்பாதிப்பது, பணத்தை கடனாக பெறுவது, ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை போட்டு அதன் மூலம் அதிக பணத்தை ஈட்ட நினைப்பது உள்ளிட்ட குறுக்குவழி நடைமுறைகள் மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. ஆரம்பத்தில் இது போன்ற நடைமுறைகள் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், அது பழக்கத்திற்கு வந்து அதிகரித்த பின் மக்களுக்கு பிரச்சனையாகவே இறுதியில் முடிந்திருக்கிறது.

சமீபத்தில் ஆன்லைனில் லோன் தருவதாக கூறி வரும் செயலிகளால் பலர் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்ஸ்டன்ட் லோன் தருவதாக கூறி 400க்கும் மேற்பட்ட செயலிகள் உள்ளன. அவை அனைத்தும் பத்து நிமிடத்தில் ரூபாய் 5,000 முதல் ரூபாய் 50,000 வரை கடன் வழங்குகின்றன.

இவ்வாறு கடன் வழங்கும் முன் உங்கள் ஆதார் எண், உங்கள் போனில் உள்ள தொடர்பு எண்கள் என உங்களைப் பற்றிய முழு விவரங்களை எடுத்துக்கொள்கின்றனர். உங்களிடம் வட்டி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் அவர்கள் உங்கள் விவரங்களை விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். இது போன்ற செயலிகளிடமிருந்து விலகி இருக்குமாறு சென்னை தலைமை காவல்நிலையம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |