ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும்போது அதனுடன் தரப்படும் ரசீதுகளை சேகரித்து ஸ்கேன் செய்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு தருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரியுடன் கூடிய பொருட்களை பொதுமக்கள் வாங்கும்போது அதற்கான ரசீதையும் கொடுத்து வாங்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக வருகின்ற ஏப்ரல் 1 முதல் கூடிய லாட்டரி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதன்படி ஜிஎஸ்டி நெட்வொர்க் என்ற பெயரில் செயலி ஒன்றை வெளியிட்ட மத்திய அரசு.
அதில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பொருட்களை பொதுமக்கள் வாங்கும்போது அதற்கான ரசீதையும் சேர்த்து வாங்கி அதை இந்த ஜிஎஸ்டி நெட்வொர்க் செயலி மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்த பின் ஒரு கூப்பன் தெரிவிக்கப்பட்டிருக்கும். அதனை மொபைலில் ஸ்கிரீன்ஷாட் மூலம் சேமித்துக் கொள்ள வேண்டும்.
பின் மத்திய அரசு குறிப்பிட்ட தேதியில் லாட்டரி காண தொகை குறிப்பிட்ட நபர்களுக்கு விழும். அந்த வகையில் அதற்கான பரிசுத் தொகை ரூபாய் 10 லட்சத்தில் இருந்து ஒரு கோடி வரை பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.