அடிக்கடி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவரின் மூளையில் நாடாப்புழு இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் வசிப்பவர் வாங்(36). இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் மற்றும் வாந்தி ஏற்படுவதுமாக இருந்துள்ளது. மேலும் அவருடைய இடது கையும், காலும் மரத்துப் போவதுடன் அடிக்கடி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்துள்ளது. அப்போது அவருடைய மூளையில் நாடாப்புழு ஒன்று உயிருடன் இருந்ததுள்ளது. மேலும் அது கொஞ்சம் கொஞ்சமாக மூளையையும் சாப்பிட ஆரம்பித்துள்ளது.
பின்பு உயிருடன் இருந்த அந்த 5 இன்ச் நீளம் கொண்ட புழுவை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்து எடுத்துள்ளனர். இது எதனால் ஏற்பட்டது என்று மருத்துவர்கள் விசாரித்ததில், அவர் நத்தையை சாப்பிடுவது தெரியவந்ததுள்ளது. மேலும் பூனை மற்றும் நாய் ஆகியவற்றின் இறைச்சியை சாப்பிடும் போது இந்த புழு பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.