Categories
அரசியல் மாநில செய்திகள்

மேடையில் பேசவே பயமா இருக்கு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இனமான பேராசிரியர் உடைய நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெரியார் வழியில் வந்த நம்முடைய இனமான பேராசிரியர் தாத்தா அவர்கள்,  திராவிட இயக்கத்தின் அறிவு கருவூலம்…  பெரியாரிடமும் ,  அண்ணாவிடமும் இருந்து பெற்ற சமூக நீதிக் கொள்கையை வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தவர்.

பேராசிரியர் தாத்தாவின் நூற்றாண்டு நினைவை முன்னிட்டு நடைபெறும் பொது கூட்ட மேடையில்..  நான் நின்று பேசுவேன் என்று நினைக்கும் போது எனக்கு இது மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன். எந்த அளவிற்கு பெருமையாக இருக்கிறதோ,  அந்த அளவிற்கு பயமாகவும் இருக்கிறது. ஏனென்றால், நான் யாரை பற்றி பேச போகிறேன் என்றால்….  கிட்டதட்ட  முக்கால் நூற்றாண்டு காலம்,  பல்லாயிரக்கணக்கான மேடையில் பேசியவர் தான் இனமான பேராசிரியர்.

கழகத்தின் மேடை எவ்வளவு கருத்துள்ளதாக அமைய வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர் இனமான பேராசிரியர் அவர்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் திமுக எனும் மாபெரும் சமூக நீதி இயக்கத்தின் தலைவராக 50 ஆண்டு காலம் பயணித்திருந்தாலும், அவருடைய இல்லத்தில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அது இனமான பேராசிரியர் தாத்தா அவருடைய தலைமையில் தான் நடைபெறும். இங்கே அண்ணன் நாசர் அவர்கள் சொன்னது போல…  இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், என்னுடைய திருமணமும் இனமான பேராசிரியர் தாத்தாவின் தலைமையில் தான் நடைபெற்றது.

அந்தளவிற்கு தலைவர் கலைஞர் அவர்களும்,  இனமான பேராசிரியர் அவர்களும் இரண்டு பேரும் ஒருத்தர் மீது ஒருத்தர் வைத்துக் கொண்ட நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் இங்கே உங்கள் முன்பு நான் நிற்கிறேன். இன்னும் சொல்ல போனால் 2019ல் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற போது…  முத்தமிழ் அறிஞர் கலைஞர் இல்லை என்னை வாழ்த்துவதற்கு, நான் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்கும் போது முதல் வாழ்த்து, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது முதல் வாழ்த்து நம்முடைய இனமான பேராசிரியர் தாத்தா அவர்களிடம் தான்.  அந்த உணர்வோடு இந்த பொதுக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன்.

நாம் பல்கலைக்கழகங்களில்  எல்லாம் பல பேராசிரியர்களை நாம் சந்தித்திருப்போம், அவர்கள் ஒரு 25, 30 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் அதிகபட்சம் 10,000 மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்திருப்பார்கள், வகுப்பு எடுத்து இருப்பார்கள், ஆசிரியராக இருந்திருப்பார்கள். ஆனால் நம் இனமான பேராசிரியர் அவர்களிடம்  பாடம் கற்றுக் கொண்டவர்கள் பல லட்சம் பேர். ஏனெனில் அவர் இனத்தின் பேராசிரியர், நம் இனமானத்தைக் காக்க இயக்க உணர்வை ஊட்டிய பேராசிரியர். ஏன் தற்போது தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கக் கூடிய தலைவர், திராவிட மாடல் அரசை கொடுத்து கொண்டிருக்க கூடிய நமது தலைவர்…  அவரும் நம்முடைய பேராசிரியர் உடைய மாணவர்தான் என்று சொல்லிக் கொள்வதில் நாம் பெருமைப்படுகிறோம்.

என்னை வளர்ப்பித்தவர்,  என்னை வார்ப்பித்தவர் பேராசிரியர் என்று தலைவரே கூறியுள்ளார். முத்தமிழ் அறிஞரே போலவே மாணவப் பருவத்தில் இருந்து இயக்க மேடையில் ஈடுபடுத்திக் கொண்டவர்தான் இனமான திரு பேராசிரியர் அவர்கள், திராவிட இயக்க கொள்கை திருவாரூர் இளைஞர் ஆன ராமையாவை அன்பழனாக மட்டும் மாற்றவில்லை. அவரையே இனமான பேராசிரியராக உருவாக்கி,  அடுத்த முக்கால் நூற்றாண்டு காலத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தோளோடு தோள்நின்று…  கழகம் காத்து கழகத் தூணாக மாறியவர்தான் இனமான  பேராசிரியர் அவர்கள். அரசியல் இயக்கத்தில் வெற்றி,  தோல்வி நிரந்தரமல்ல, ஆட்சி அதிகாரமும் வரும் போகும், தொடர் தோல்விகளை எதிர்கொள்வது இயல்பானது. ஆனால் எல்லா நேரங்களிலும் கொண்ட கொள்கையிலிருந்து தவறாக செயலாற்ற ஒரு பெரும் பலன் தேவை என தெரிவித்தார்.

Categories

Tech |