நடிகை ஜெனிலியா ஸ்கேட்டிங் செய்யும் போது தடுமாறி கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை ஜெனிலியா ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து நடிகர் விஜய்யின் சச்சின் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நடிகர் ஜெயம்ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம் , நடிகர் தனுஷுடன் உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி ,தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இதன்பின் ஜெனிலியா நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
தற்போது நடிகை ஜெனிலியா குடும்ப வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஸ்கேட்டிங் கற்றுக் கொள்ளும்போது நடிகை ஜெனிலியா தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஜெனிலியா தனக்கு ஏற்பட்ட காயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.