தேசிய கல்வி கொள்கை உதவி தொகை பெற்று தர பெரும்பாலான கல்விகள் விண்ணப்பிக்காததால் 7000 மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வி உதவி தொகை திட்டமான தேசிய வருவாய்வழி திறன் தேர்வு மூலம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தகுதித் தேர்வுகள் வைக்கப்படுகின்றனர். அதில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள ஆண்டுக்கு 12,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் 1695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அந்தந்த பள்ளிகள் இணையதளத்தில் விண்ணப்பித்தால் மட்டுமே இந்த ஆண்டுக்கான உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பே பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் இதுவரை 18 மாவட்டங்களில் இருந்து 357 விண்ணப்பங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன என்றும் இதர மாவட்டங்களிலும் இந்த பணியை தொடங்கவே இல்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டுகளில் இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புதுப்பித்தல் பணிகளும் குறைந்த அளவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு உதவித் தொகை பெற்று தர பள்ளிகள் உடனடியாக மத்திய அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.