Categories
மாநில செய்திகள்

“அக்டோபர்-1” பள்ளிக்கு செல்ல ஆசையா…. NO 1 OR 2…? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க….. வெளியான அறிவிப்பு….!!

அக்டோபர் 1 முதல் பள்ளிகளுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தளர்வுகளில் பல செயல்பாடுகளுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டாலும், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழகத்தில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் வருகின்ற,

அக்டோபர் 1 முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மாணவர்கள் ஒரு நாளில் ஒரு குழுவினர் மட்டுமே பள்ளிக்கு வரலாம். முதல் குழு திங்கள், புதன், வெள்ளி எனவும், இரண்டாவது குழு செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்ஆசிரியர்களுக்கான முதல் குழு திங்கள், செவ்வாய், 2 வது குழு புதன், வியாழன் மீண்டும் முதல் குழு வெள்ளி, சனி ஆகிய நாட்களில் ரொட்டேஷன் முறையில் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |